உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் - அமெரிக்கா - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டாகியும் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பிடமிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அச்சுறுத்தல் அறிக்கையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை உக்ரைன் போருக்கு ரஷ்யா இழுக்கக்கூடும் என்றும், இது உலக நாடுகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில வாரங்களாக உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பல்வேறு விதமான ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, உக்ரைனை வலுவிழக்க செய்வதற்காக ஆற்றல் வளங்களை குறி வைத்து தாக்கி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin could use nuclear weapon to end Ukraine war


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->