பிரதமர் மார்க் ருடே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நெதர்லாந்தில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal



நெதர்லாந்தில் நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் மார்க் ருடே பிரதமராக இருந்தார். நெதர்லாந்துக்கு புலம்பெயர்ந்து வருபவரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டணி கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் முற்றியது. 

இதனை சமரசம் செய்ய ருடே எடுத்த அனைத்து முயற்சிகள் தோல்வியடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதில் எந்தஒரு ரகசியமும் இல்லை.  கூட்டணி கட்சிகளுக்குள் இடம்பெயர்வு கொள்கையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தது. 

இதனால் தேர்தல் நடைபெறும் வரை மந்திரி சபை தொடரும் என ருடே அறிவித்திருந்தார். இந்த வருட இறுதிக்குள்150 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

நெதர்லாந்தின் நீண்ட காலம் பிரதமராக ருடே பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தில் அடைக்கலம் கேட்டு வருவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டுமே 47 ஆயிரம் பேர் தஞ்சம் அடைய அனுமதி கேட்டு வந்தனர். இந்த வருடம் 70 ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இதை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர மாதத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என  ருடே தலைமையிலான காட்சிகள் தெரிவித்தனர். 

ஆனால், இதற்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சி கலைந்துவிட்டது. இதனால் வருகிற தேர்தலுக்கு பிறகு ருடே அரசியலில் இருந்து விலக போகவதாக அறிவித்துள்ளார். இதனால் நெதர்லாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister mark rude shocking news


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->