சீனாவை உள்ளே விட்டது தான் தவறு - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் பல வருடமாக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அதிகளவு வரியை விதித்து அமெரிக்கா அறிவித்த நிலையில், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. 

இந்த வர்த்தக போரானது பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இறுதி தருவாயை எட்ட இருந்தது. இந்த நேரத்தில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அமெரிக்காவை கடுமையான அளவு உலுக்கி, உலக நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. 

இந்த வைரஸின் தாக்கத்திற்கு அமெரிக்காவில் மட்டும் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவின் மீதான கோபம் அமெரிக்காவிற்கு கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் பல பொருளாதார தடைகள் அதிரடியாக விதிக்கப்பட்டது.

இந்த சூழலில், உலக வர்த்தக அமைப்பில் இருந்து வரும் சீனா, தனது விதியை மீறிவிட்டதாக அமெரிக்கா புகார் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்திக்கையில், " உலக சுகாதார அமைப்பிற்குள் சீனா நுழைந்ததே, மிகவும் மோசமான விஷயத்தில் ஒன்றாக இருக்கிறது. உலக அமைப்பில் எந்த நாடுகளும் மீறாத விதியினை, சீனா மீறியுள்ளது " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President trump feel sad about china part of United Nation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->