#BREAKING : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கி.மீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (ஜப்பான் நாட்டு நேரப்படி இரவு 11.36) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு நேரம் என்பதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் நிலநடுக்கத்தை தொடர்ந்து அலறியடித்துக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Powerful earthquake in Japan Tsunami warning


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->