நடுவானில் தூங்கிய விமானிகள்., அடுத்து அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 விமானமானது சூடானின் கர்டொம் நகரிலிருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி சென்றது. 

அப்போது விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் தானியங்கி விமானம் இயக்கியை செயல்படுத்திவிட்டு தூங்கியுள்ளனர். 

இந்த நிலையில், விமானம் எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகருக்குள் நுழைந்த போது விமானம் தரையிறங்குவதற்கான முன் அறிவிப்பை விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் விமானிகள் தூங்கிக்கொண்டு இருந்ததால் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அழைப்புக்கு அவர்களுக்கு கேட்கப்படவில்லை. 

விமானம் தரையிறங்க வேண்டிய இடத்தைக் கடந்து பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த ஓசையை எழுப்பி நின்றுள்ளது. இதன் பின்னர் இந்த சத்தத்தை கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடுபாதைக்கு கொண்டு சென்று தரையிறக்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pilots who fell asleep in midair


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->