அச்சத்தில் மக்கள்! மீண்டும் வெடித்து சிதறும் இந்தோனேசியா எரிமலை!
People in fear Indonesian volcano erupts again
இந்தோனேசியா நாடு பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் அங்கு பல எரிமலைகள் அமைந்துள்ளன. அங்கு குறிப்பிட்ட வெவோடோபி நகரில் இருக்கும் லிவோட்பி எரிமலையானது 1,500 மீட்டர் உயரமுள்ளது.

''லக்கி லக்கி'' என்று பிரபலமாக அழைக்க படும் இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் திறண்டு வருகின்றனர்.அண்மைக்காலமாக அந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி அச்சுறுத்துகிறது.
அவ்வகையில்,தற்போது லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு எரிமலையிலிருந்து தீக்குழம்பு வெளியேறி பரவியது.இதைத்தொடர்ந்து மீண்டும் அடுத்த சில மணி நேரங்களில் எரிமலை வெடிக்க தொடங்கியது.
எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக சூழ்ந்து காட்சியளித்தது.இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.அதுமட்டுமின்றி,எரிமலை அருகே இருக்கும் கிராமங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
English Summary
People in fear Indonesian volcano erupts again