பாலியல் துன்புறுத்தலில் 167 வது இடத்தை பிடித்த பாகிஸ்தான்... 6 மாதத்தில் 2200 குழந்தைகள்...!   - Seithipunal
Seithipunal


2022-ம் ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையின்படி,  மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச மகளிர், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் மொத்தம் கணக்கிலுள்ள 170 நாடுகளில் பாகிஸ்தான் 167-வது இடம் வகிக்கிறது.

இந்நிலையில், அரசு சாரா அமைப்பின் அறிக்கை ஒன்று, கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தானில் மட்டும் 2,200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக சுட்டி காட்டியுள்ளது. 

இதுபற்றி அந்நாட்டில் இருந்து வெளிவரும் "தி நியூஸ் இன்டர்நேசனல்" என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவர், சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2,211 ஆக உள்ளது. இது அந்நாட்டில் மனித உரிமைகளின் இருண்ட சூழ்நிலையை எடுத்து காட்டியுள்ளது. 

இதற்காக 79 செய்தி நிறுவனங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பல வழக்குகள் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தலுக்காக கடத்தப்படுதல் நடக்கின்றன என்று அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிறுவர்கள் 1,004 பேரும், சிறுமிகள் 1,207 பேரும் உள்ளனர். 

மேலும், 803 சிறுவர், சிறுமிகள் கடத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் 298 பேர் சிறுவர்கள். 243 பேர் சிறுமிகள். இந்த கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து, நகர பகுதிகளில் 52 சதவீத வழக்குகளும், கிராமப்புற பகுதிகளில் 48 சதவீத வழக்குகளும் பதிவாகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan sexual harassment 2200 children in 6 months


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->