பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 651 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலும், 83 பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டனை காலம் முடிந்து 631 மீனவர்கள் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் ஜூஃபிகர் என்பவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் அமைச்சர், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 600 மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் இதன் ஒரு பகுதியாக வரும் 12ஆம் தேதி 199 மீனவர்களும், மீதமுள்ள மீனவர்கள் 14ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan release 199 indian fisherman from prison


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->