சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக அடிமைப்பட்டுள்ளது - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 
                                    
                                    
                                   Pakistan enslaved to international monetary fund
 
                                 
                               
                                
                                      
                                            சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக அடிமைப்பட்டுள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியால் இறக்குமதியாக கூடிய பொருட்களை வாங்க கூட போதிய நிதிவசதி இல்லாத சூழலால், உணவு, எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது .
இதையடுத்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பாகிஸ்தான் 170 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி கோரியுள்ள நிலையில், தற்போது வரை சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதியை விடுவிக்கவில்லை.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் அடிமைப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், பொருளாதார ரீதியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிமைப்பட்ட நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டுவர பல சவாலான முடிவுகளை நாம் எடுத்து வருகிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Pakistan enslaved to international monetary fund