நீருக்கடியில் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ட்ரோனை பரிசோதனை செய்த வடகொரியா.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஓராண்டாக கொரிய எல்லைப் பகுதியில் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனைகளை செய்து வருகிறது. மேலும் அமெரிக்கவுடனான, தென்கொரியாவின் தீவிர போர் பயிற்சியே வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய நீருக்கடியில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ட்ரோனை சோதனை செய்ததாக வடகொரியாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

ஹெய்ல் என்று அழைக்கப்படும் ஆளில்லா விமான மார்ச் 21 முதல் 23 வரை கடலில் பயணம் செய்து பின்பு வெடிக்க செய்யப்பட்டதாகவும், நீருக்கடியில் திருட்டுத்தனமாக ஊடுருவி அணு ஆயுத இலக்குகளை நோக்கி வெடிக்க செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea tests under water nuclear drone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->