தன்னிச்சையாக அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சட்டத்தை இயற்றியது வடகொரியா.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை செய்து வருவதால், அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பற்றத்தன்மை நிலவி வருகிறது.

இந்நிலையில் போர் சூழ்நிலையின் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள தன்னிச்சையாகவே அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது.

இதையடுத்து அனு ஆயுதச் சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை எனவும், நாட்டினுடைய அணுசக்தியின் நிலையை வலுப்படுத்தும் செயல்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை எனவும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வடகொரியா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் பிற நாடுகளால் ஏற்படும் பேரழிவை தடுக்க தன்னிச்சையாக அணுகுண்டுகளை பயன்படுத்தலாம் என்று இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea has enacted legislation to use nuclear weapons


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->