ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு வடகொரியா மறுப்பு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போரினால் இரு நாடுகளுக்கும் பொருள் சேதமும், உயிர் சேதமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரஷ்ய ஆயுத இறக்குமதி தொடர்பான அறிக்கையை வெள்ளை மாளிகை செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் வெளியிட்டது.

அதில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால் ரஷ்யாவிடம், ஆயுதபற்றாக்குறை நிலவி வருவதாகவும், ஈரானிடமிருந்து ராணுவ ஆளில்லா விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகொரியாவிடமிருந்து பிரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கவில்லை எனவும், இது போன்ற தேவையற்ற கருத்துக்களை அமெரிக்கா பரப்புவதை நிறுத்துமாறும் வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவிற்கு உள்ளது என்றும் தெரிவித்துடுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea denies america report of export of weapons to Russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->