சீனாவுக்கு ஒரு சட்டம் இந்தியாவுக்கு ஒரு சட்டமா..? 'இந்தியா உடனான உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்': டிரம்புக்கு அறிவுரை கூறியுள்ள நிக்கி ஹாலே..!
Nikki Haley advises Trump not to sever ties with India
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்தும் அதனை தடுத்து நிறுத்த அவரால் முடியவில்லை. இதன் காரணமாக ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது வர்த்தக ரீதியில் வரியை உயர்த்தி வருகிறார். குறிப்பாக சீனா மற்றும் இந்தியா மீது அதிக வரி விதித்துள்ளார். ஆனால், இதனை ஏற்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு விலக்கு அளித்து விட்டு, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுகளுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ளக்கூடாது என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எடுத்து கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது. ஆனால், ரஷ்யா மற்றும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, 90 நாட்கள் விலக்கைப் பெற்றுள்ளது. சீனாவுக்கு அனுமதி அளித்து, இந்தியா போன்ற வலுவான நட்பு நாடுடனான உறவை முறித்துக் கொள்ளாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nikki Haley advises Trump not to sever ties with India