நியூசிலாந்தை புரட்டி போட்ட கேப்ரியல் புயல் - தேசிய அவசரநிலை பிரகடனம் - Seithipunal
Seithipunal


பசிபிக் நாடான நியூசிலாந்தின் வடக்கு மாகாணங்களை சக்தி வாய்ந்த கேப்ரியல் புயலால் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் வீடுகளின் மேல் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாயந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு 46000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும் புயலைத் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்ததால் நார்த்லேண்ட், ஆக்லாந்து, தைராவிட்டி, பே ஆஃப் ப்ளெண்டி, வைகாடோ மற்றும் ஹாக்ஸ் பே பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலினால் மேலும் அதிக கனமழை பெய்ய இருப்பதால், வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newzealand declares emergency as cyclone Gabrielle hits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->