வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் க்ரீன் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு; புது வழிகாட்டு முறைகள் வெளியீடு; மீறினால் தண்டனை..? - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 02-வது முறையாக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முதல் வெளிநாட்டவர்கள் விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார். அந்த வகையில், தற்போது அவர் தலைமையிலான அந்நாட்டு அரசு வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. 

இது வரும் டிசம்பர் 26 முதல் அமலுக்கு வரவுள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் இது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்வது தடுக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New guidelines issued for foreigners and green card holders in the US


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->