ராஜஸ்தான் : பிறந்த குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் ஜவர்லால் மேக்வால். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அவரது மனைவிக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. 

ஆனால், அவருக்கு மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தால் நிரந்தர வேலை குறித்த அச்சம் ஏற்பட்டது. ஏனென்றால், ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி உள்ளது. 

இந்நிலையில், அவரும் அவரது மனைவியும் மூன்றாவது குழந்தையால் தங்களுடைய வேலையில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிறந்து ஐந்து மாதம் ஆன பெண் குழந்தையை கால்வாயில் வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிகானேர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் தெரிவித்ததாவது, "நிரந்தர அரசுப் பணியைப் பெறுவதற்காக தங்கள் மகளைக் கால்வாயில் வீசி சென்ற வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியர் நேற்று கைது செய்யப்பட்டனர்" என்றது தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan couples arrested for thorw five month baby in canal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->