ஒரே இடத்தில் 12 நாட்களாக இடைவிடாது வட்டமிடும் செம்மறி ஆடுகள்.!  - Seithipunal
Seithipunal


சீனா நாட்டில் மங்கோலியா நகரில் செம்மறி ஆட்டுக் கூட்டம் ஒன்று தொடர்ந்து ஒரே இடத்தில் பல மணி நேரமாக வட்டமிட்ட விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்த ஆடுகள் இதேபோல், தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் இடைவிடாமல் சுற்றி வருவதாக தகவல் பரவி வருகிறது. 

இந்த வீடியோவைப் பார்க்கும் சிலர், ஆடுகளின் இந்த விசித்திரமான செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று பலரும் குழம்பி வருகின்றனர். ஒரு சிலர் இது வேற்றுகிரக வாசிகளின் செயலாக இருக்கலாம் என்றும், மேலும் சிலர் இது ஒரு அமானுஷ்யமான நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து, ஆட்டுப் பண்ணையின் உரிமையாளர் தெரிவித்ததாவது, "முதலில் ஒரு சில ஆடுகள் மட்டும் இவ்வாறு சுற்றத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து பிற ஆடுகளும் அதனுடன் சேர்ந்து கொண்டதாகவும், அனைத்து ஆடுகளும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது, "இந்த விநோத நடவடிக்கைக்கு 'லிஸ்டீரொயோசிஸ்' என்ற பாக்டீரியா நோய் தொற்று தான் காரணம் என்று தெரிவித்தனர். 

இந்த நோய் கிருமியானது மூளையின் ஒரு பகுதியை தாக்குவதால், ஆடுகள் இதேபோன்று ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வட்டமிடும். இதில் அமானுஷ்யம் எதுவும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near china Sheep circling in the same place for 12 days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->