"என் எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர்" - பிரிட்டன் தொழிலதிபர்..!  - Seithipunal
Seithipunal


பிரிட்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், அவரது எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர் என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, எனது எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்திருக்கிறார். 

kadalur district, seithipunal

மேலும், தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்து வந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria  என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் தெரிவித்திருக்கிறார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன்  தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

my great grand mother is kadalur district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->