மோடியின் லடாக் விஜயம்.. விமர்சித்த சீனா..!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாந் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், இராணுவ தலைமை தளபதி எம்.எஸ்.நரவானே ஆகியோர் லடாக்கில் உள்ள நிம்மு பகுதிக்கு இன்று சென்றனர். அங்கு எல்லை விவாகரம் தொடர்பாகவும், பாதுகாப்பு விபரம் தொடர்பாகவும் கலந்தாலோசித்தனர். 

இராணுவ வீரர்களுக்கு மத்தியில் பரபரப்புடன் உரையாற்றிய மோடி, காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார். மேலும், அனைவரும் விரைவில் நலன்பெற இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார். 

மோடியின் திடீர் லடாக் பயணம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீன வெளியுறவுத்துறை இந்த பயணத்தை விமர்சித்து இருந்தது. இந்த நிலையில், சீனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ், உள்ளூர் விவகாரத்தை மேற்கோள்காட்டி விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து அந்த பத்திரிகையில், மோடி தனக்கு எதிரான விமர்சனங்களை மறுப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தான் ஒரு வலிமையானவர் என்பதை காட்டுவதற்காக லடாக் பகுதிக்கு சென்று உள்ளார். 

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக உள்ள விஷயத்தை மறக்கடிக்கும் வகையில் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். எல்லை பிரச்சனையை பொருத்தவரையில், சுமூகமாக பேசித் தீர்க்க இந்திய அரசு தயாராக இருந்தாலும், இறையாண்மை பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதியுடன் இருக்கிறது என்பதை சீனாவுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் காட்ட மோடியின் பயணம் உதவியது என்று கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi visit Ladakh China review about it


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal