தன்னை தானே திருமணம்.. 90 நாட்களில் விவாகரத்து.. பிரேசில் மாடல் அழகியின் சுவாரசிய அனுபவம்.,! - Seithipunal
Seithipunal


மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருமணம் என்றால் இருவருக்கும் இடையில் நடைபெறுவது  தான் என நம்மில் பெரும்பாலானோர் நினைத்து கொண்டிருப்போம். ஆனால், பிரேசிலையை சேர்ந்த மாடல் அழகி தன்னை தானே திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்தும் செய்து கொண்டிருக்கிறார்.

ஆம், பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி கிறிஸ் கலேரா. 31 வயதாகும் இவர் கடந்த காலங்களில் உறவு முறிவால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த செப்டம்பர் மாதம் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவர் தன்னை தானே விவாகரத்து செய்துள்ளார். அவரை அவரே திருமணம் செய்து கொண்டு 90 நாட்கள் கழித்து இந்த முடிவை அவர் எடுத்ததற்கான காரணத்தையும் கூறுகிறார்.  

மிகவும் சிறந்த நபரை தற்போது சந்தித்ததாகவும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளதால் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

model cris galera who married herself is divorcing herself after 3 months


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal