கூலிப்படையை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்த பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைதியில் 2021ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து ஹைதிடியில் கூலிப்படை கும்பல்களின் அட்டூழியங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சுமார் 200 கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில் தலைநகரின் 80% பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் பெரும்பகுதிகளை கூலிப்படைகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. 

இந்நிலையில் கடந்த வாரம் ஹைதி தலைநகரில் கூலிப்படை நடத்திய தாக்குதலில் பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 70 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து சந்தேகத்திற்குரிய கூலிப்படை கும்பல்களை சேர்ந்த 13 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். மேலும் 13 பேருக்கு பொதுமக்கள் தீ வைத்ததில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து நகரத்தில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதால் கூலிப்படை கும்பல்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mob kills burnt 13 gangsters in Haiti


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->