ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த நபர்.. பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


மிக்கைல் கலாஸ்னிக்கோவ்:

ஏகே47 துப்பாக்கியை வடிவமைத்த மிக்கைல் கலாஸ்னிக்கோவ் 1919ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவரை கலாஸ்னிக்கோவ் என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

இவர் 1942ஆம் ஆண்டு முதல் செஞ்சேனைப் படைப்பிரிவின் தலைமையகத்திற்காக துப்பாக்கிகளை வடிவமைக்கும் பிரிவில் உதவி புரிந்துக் கொண்டிருந்தார்.

1944ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கியின் முன் மாதிரியை வைத்து, வாயுவினால் செயல்படக்கூடிய சிறிய துப்பாக்கியை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 1946ஆம் ஆண்டு தாக்குதல் துப்பாக்கிகளை வடிவமைக்கும் நிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

இதன் உச்சநிலையாக, 1947ஆம் ஆண்டு ஏகே47 வகை தாக்குதல் துப்பாக்கியை உருவாக்கினார். இதன்பின் கலாஸ்னிக்கோவ் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார்.

கலாஸ்னிக்கோவ் இருமுறை சோசியலிச தொழிலாளர்களின் மாவீரன் (ர்நசழ ழக வாந ளுழஉயைடளைவ டுயடிழரசள) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mikhail kalashnikov birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->