#BREAKING || நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தின் கெர்மடெக் தீவி பகுதியில் இன்று(திங்கட்கிழமை) காலை 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி காலை 6.11 மணிக்கு அட்சரேகை -29.95ஆகவும், தீர்க்கரேகை -178.02 ஆகவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடக்கத்தை தொடர்ந்து, நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து கார்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Massive earthquake of newzealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->