பிரபல நாட்டில் கட்டாய மரண தண்டனை நீக்கம்.. அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மலேசியாவில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், தேசத்துரோகம் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்தக் குற்றங்களுக்கு நீதிமன்றம் விரும்பினால் மரண தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கும். மேலும் 20க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு மாற்று தண்டனைகளை பரிசீலித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் மரண தண்டனைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் முந்தைய மரண தண்டனைகள் ரத்து செய்யப்படும் என்று கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சியினர் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandatory death penalty abolition Malaysia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->