ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி அஹ்மத் சியாம் பலி.!! - Seithipunal
Seithipunal


காசாவிற்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் நாங்கள் காசாவில் அரசு அமைக்க, ஆக்கிரமிக்க, யாரையும் இடமாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை. 

காசாவில் பொதுமக்கள் அரசாங்கம் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் மிகவும் சிறந்த வகையில் செயலாற்றி வருகிறது. ஹமாஸ் உடனான போர் நிறுத்தம் என்பது சரணடைவது போன்ற அர்த்தமாகும். எவ்வளவு நாட்கள் போர் நீண்டாலும் நாங்கள் செய்து முடிப்போம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுமார் 1,000 காசா மக்கள் மற்றும் நோயாளிகளையும் ரான்டிசி மருத்துவமனையில் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதற்கும் அவர்கள் தெற்கு காசா நோக்கி வெளியேறுவதைத் தடுப்பதற்கும் ஹமாஸ் அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அஹ்மத் சியாமை இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த போர் விமானம் தாக்கி கொன்றது.

அஹ்மத் சியாம் ஹமாஸின் நாசர் ரட்வான் பிரிவின் தளபதியாக இருந்தார். மேலும் காசாவில் உள்ள பொதுமக்களை பயங்கரவாத நோக்கங்களுக்காக மனிதக் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்தியதற்கு மற்றொரு உதாரணம் என இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

main commander of Hamas organization Ahmed Siam was killed


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->