காட்டின் ராஜாவாக வலம் வந்த சிங்கத்திற்கு இப்படி ஒரு நிலையா..? காண்போரை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகரில் கார்டூமில் அல்-குரேஷி என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. இதில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சூடான் நாட்டில் மிகுந்த வறுமை நிலவி வருவதால் அங்குள்ள விலங்குகளை பராமரிக்க அந்தநாட்டு அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து, தனியார் அமைப்புகளின் நிதியின் மூலமே அங்குள்ள விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உணவு மற்றும் மருந்துகள் வாங்க பணம் இல்லாமல் பூங்கா நிர்வாகம் தவித்துள்ளது. இதனால் சிங்கங்களுக்கு உணவு அளிக்க முடியாத காரணத்தால் அந்த பூங்காவில் உள்ள விலங்குகள் பட்டினி கிடைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படி பட்டினியால் வாடி உடல் மெலிந்த சிங்கங்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பட்டினியால் உடல் நலிந்த நிலையில் காணப்பட்ட ஐந்து சிங்கங்களில் ஒரு சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாகவும், மீதம் உள்ள நான்கு சிங்கங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பட்டினியால் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lion hungry viral photos in social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->