மலேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு.! 9 பேரை தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


மலேசியாவில் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே அமைந்துள்ள படாங் காளி நகரத்தில் உள்ள இயற்கை விவசாய பண்ணையை உரிய அனுமதியின்றி, அதன் உரிமையாளர்கள் சுற்றுலா தளமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடில்களை அமைத்து தங்கி இருந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து மண் சரிந்ததால் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலப்பரப்பு மண்ணால் மூடப்பட்டது. இந்த நிலச்சரவில் பண்ணையில் முகாமிட்டிருந்த ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என சுமார் 400 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் 53 பேர் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளர்.

இந்த நிலச்சரிவில் இதுவரை ஐந்து வயது குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 12 பேர் மாயமாகிய நிலையில், அவர்களில் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Landslide death toll rises to 24 and Search for 9 people intensifies in Malaysia


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->