நோபல் பரிசு பெற்ற திருமதி.ஆலிஸ் ஆன் முன்ரோ அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற, உலகப் புகழ்பெற்ற படைப்பாளி திருமதி.ஆலிஸ் ஆன் முன்ரோ அவர்கள் பிறந்ததினம்!.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், உலகப் புகழ்பெற்ற படைப்பாளியுமான ஆலிஸ் ஆன் முன்ரோ கனடாவில் பிறந்தார். (ஜூலை 10, 1931 - மே 13, 2024) கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார் , இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். 

 இவரது முதல் நூல்கள் தி டைமன்ஷன்ஸ் ஆஃப் ஏ ஷாடோ (The Dimensions of a Shadow), டான்ஸ் ஆஃப் தி ஹாப்பி ஷேட்ஸ்(Dance of the Happy Shades) முதல் கதை தொகுப்பாகும். தொடர்ந்து பல்வேறு பிரபலமான பத்திரிகைகளில் இவரது நூல்கள் வெளிவந்தன.

 இவர் கனடாவின் புனைக்கதைகளுக்கான ஆளுநர் விருதை (Governor General's Award)) மூன்று முறையும், மான் புக்கர் விருது (Man Booker), ஓ ஹென்றி விருது, எட்வர்ட் மெக்டோவெல் பதக்கம், டபிள்யு.ஹெச்.ஸ்மித் இலக்கிய விருது என பல விருதுகளை வென்றுள்ளார்.

 புனைக்கதையின் மிகப்பெரிய எழுத்தாளர் என்றும், கனடாவின் செக்கோவ் (Chekhov) என்றும் புகழப்பட்டவர் ஆலிஸ் ஆன் முன்ரோ.

 

இன்று பிறந்தநாள் காணும் கிரிக்கெட் வீரர்திரு.சுனில் கவாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் சுனில் கவாஸ்கர் 1949ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

எதிராக 1975,76ல் நடந்த போட்டியின் 2, 3,வது டெஸ்ட்களில் 156 மற்றும் 102 ரன்கள் எடுத்தார்.

 இவர் மொத்தம் 125 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை, இரானி கோப்பை உட்பட 100 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

 பத்மபூஷண், அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்தவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of Mrs. Alice Munro who received the Nobel Prize


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->