ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு! பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் ஆயிரம் கணக்கானோர் உயிர் இழந்து உள்ளனர்.

20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். இந்த ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு, பொருளாதார தடையும் விதித்துள்ளது. 

இந்தப் போரினால் உக்ரைனின் பொருளாதாரம் பெருமளவில் சரிந்து உள்ள நிலையில், 50 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் போரை நிறுத்தினால் வேலையின்மை 8.9 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International labour office


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->