லெப்பர்டு 2 பீரங்கிகளை இயக்க உக்ரைன் வீரர்களுக்கு தீவிர பயிற்சி !! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க நவீன ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் பல்வேறு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து உக்ரைனின் வேண்டுகோளுக்கிணங்க, ஏவுகணைகளை எதிர்கொள்ளும் அதிநவீன லெப்பர்டு 2 ரக பீரங்கிகளை வழங்க போலந்து அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லெப்பர்டு 2 பீரங்கிகளை இயக்குவதற்கு நார்வே, கனடா மற்றும் போலந்து ராணுவ வீரர்கள் தினமும் பல மணி நேரம், உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய போலந்து அதிபர் அண்ட்ரே டுடா, லெப்பர்டு 2 பீரங்கிகளில் உக்ரைன் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொழில்நுட்பம் மற்றும் நுணுக்கங்களை உக்ரைன் வீரர்கள் வேகமாக கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த லெப்பர்டு 2 ரக பீரங்கிகள், கரடு முரடான பாதையில் மணிக்கு 43 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். எதிர்வரும் இலக்குகளை குறிப்பார்த்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intensive Training given to ukraine soldiers to operate leopard tanks


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->