துபாயில் சாலை விபத்து ஏற்படுத்திய இந்தியர் - ரூ.18 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தைச்  சேர்ந்த ஒருவர் துபாயில் உள்ள அல்-பர்ஷா பகுதியின் முக்கிய சாலை ஒன்றின் நடுவில் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர், அவர் திடீரென காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதைக் கவனிக்காமல் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அந்த கார் மீது மோதியுள்ளார். 

இந்த விபத்தில், சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பம் சிக்கியது. இந்த குடும்பத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஒன்று துபாய் போக்குவரத்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்த வழக்கு குறித்த விசாரணையில், வங்காளதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த கார் ஓட்டுனர்களான இரண்டு பேருக்கும் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக மொத்தம் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக செலுத்த வேண்டும். இதன்படி, இந்தியர் ரூ.18 லட்சம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian man eighteen lakhs rupees fined to dubai car accident family members


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->