உக்ரைனில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - இந்திய தூதரகம் - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனில் 1000-கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்கும் முக்கிய பாலம் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் படைகள் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. 

இதையடுத்து ரஷ்யா படைகள், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய அடுத்த நாளே ரஷ்ய படைகள், இந்த உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில், கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் தங்களுடைய இருப்பின் நிலை குறித்து தமக்கு தெரிவிக்குமாறும் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian citizens residing in Ukraine should avoid non essential travel


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->