நியூசிலாந்துடன் உறவுகளை புதுப்பிக்க இந்தியா தயாராக உள்ளது.! வெளியுறவுத்துறை அமைச்சர் - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பசிபிக் நாடான நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை சந்தித்து கலந்துரையாடினார்.

இதையடுத்து நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் கட்டப்பட்ட இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்த பின் நிகழ்ச்சியில் உரையாடினார். அப்போது, இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான உறவுகளை புதுப்பிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு பிரதமர்களின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு பார்வை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உறவை பலப்படுத்துகிறது என்றும், இரு நாடுகளும் அதிக தொழில்கள் செய்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையே உள்ள வணிகம், டிஜிட்டல், விவசாயம், கல்வி, பாரம்பரிய மருத்துவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பு, அமைதி மற்றும் முன்னேற்றத்தை இந்தியா உறுதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India ready to renew the relationship between India and newzealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->