ரூ.7 இலட்சம் இழப்பீடு கட்டும் பிரபல விமான நிறுவனம்.!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டில் உள்ள மல்லோர்க்கா நகரில் இருந்து ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னாவிற்கு தனது தந்தையுடன் ஆறு வயதுடைய சிறுமி நாகி என்ற நிறுவனத்துடைய விமானத்தில் பயணம் செய்துள்ளார். 

இந்த விமானம் பார்முலா 1 ஓட்டுநர் நிகி ளாடைவிற்கு சொந்தமாக இருக்கும் நிலையில்., இந்த விமானத்தில் மேற்கூறிய சிறுமி பயணத்தின் போது காபி அருந்தியுள்ளார். 

இந்த நேரத்தில்., விமானம் சென்று கொண்டு இருந்த நிலையில்., இயற்கையான காற்றழுத்தத்தின் காரணமாக சிறுமியின் தொடையில் கொட்டியுள்ளது. இதன் காரணமாக சிறுமிக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. 

coffee,

பின்னர் இதனைத்தொடர்ந்து சிறுமியுடைய தந்தையின் தரப்பில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில்., இது குறித்த வழக்கு விசாரணையில்., அதிர்வால் காபி கொட்டியது என்று வாதம் செய்தது. 

மேலும்., இந்த விபத்திற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்காது என்று கூறிய நிலையில்., பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏற்படும் பிரச்சனைக்கு விமானம் மற்றும் விமான நிறுவனம் பொறுப்பு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 இலட்சம் இழப்பீடு தரக்கூறி நீதிபதிகள் இந்த வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளனர்.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Spain flight company pay penalty


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->