102 வருடத்தில் இல்லாத அளவு நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பதறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள கரிபியன் கடல் பகுதியில் இருக்கும் அமெரிக்க பிராந்தியமான போர்டோ ரிக்டோ நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. 

மேலும்., கடந்த 10 நாட்களுக்காகவே சுமார் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. 

இது தொடர்பான சோதனைகளில் அங்குள்ள அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில்., சுமார் 102 வருடங்களில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தில் மொத்தமாக சுமார் 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில்., சுவர் இடிந்து விழுந்ததில் காரணமாக 73 வயதாகும் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இதனைப்போன்று பலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில்., அங்குள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் நிலையங்கள் சேதம் அடைந்து மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் அதிகளவு வீணாகியுள்ளது. மேலும்., அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் காரணமாக அவசர நிலை பிரகடனம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in porto rigo earthquake peoples panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->