நியூசிலாந்தில் அதிபயங்கர நிலநடுக்கம்.!! சுனாமி எச்சரிக்கை., மக்கள் பீதி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது அவரும் நடைபெறும் பல விஷயங்கள் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தி வருகிறது. 

கடந்த சில வருடங்களாகவே நிலநடுக்கத்தின் தாக்கமானது ஏனைய நாடுகளிலும் மக்களால் உணரப்பட்டு வரும் நிலையில்., பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஏற்படும் நிலநடுக்கம்., தொடர் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படுத்தி வரும் நிலையில்., மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.  


இதனை போன்ற நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியே வந்து திறந்த வெளிகளில் தஞ்சமடைந்தனர்.  முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு நிலையில்., பின்னரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டன. பின்னர் சுனாமி எச்சரிக்கை மீண்டும் திரும்ப பெறப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in new zeland country have a massive earthquake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->