ஆண்களை தேடிச் சென்று பிடித்துக்கொள்ளும் கொரோனா.. தப்பித்த பெண்கள்.. கதறலில் ஆண்கள்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடாக இருந்து வரும் நேபாள நாட்டில் கொரோனா பரவிய துவக்கத்தில், கொரோனா இந்திய வைரஸ் என்றும், கொரோனா இந்தியாவில் இருந்து வந்த நபர்களால் அதிகளவு பரவி வருகிறது என்றும் அந்நாட்டின் முக்கிய பொறுப்பாளிகள் குற்றம் சுமத்தினர். 

இந்நிலையில், நேபாளத்திலும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் அங்கு 535 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 9,561 ஆக உயர்ந்தது.

மேலும், நேபாளத்தில் பெண்களை விட ஆண்களை அதிகளவு கொரோனா குறிவைத்து பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நேபாளத்தில் கொரோனாவால் 894 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,667 பேரும் ஆண்கள் என்பதும், இதில் 23 பேர் மரணடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Nepal Huge Numbers of male affected Corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->