ஈராக் தொடர் வன்முறை... துடிதுடித்து உயிரிழக்கும் மக்கள்... அடுத்தடுத்து அரங்கேறும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஈராக் நாடானது தொடர்ந்து அரங்கேறி வரும் போரின் காரணமாக முற்றிலும் நிலைகுலைந்து காணப்படுகிறது. மக்கள் அனைவரும் வாழ்வாதாரமின்றி தவிக்கும் நிலையில்., மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்., ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் பகுதிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில்., சுமார் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிலையில்., சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.  

இந்த துயர நிலையில்., நேற்றிரவு அங்குள்ள கர்பலா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 18 மக்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்த சமயத்தில்., 

கர்பலா நகரில் உள்ள இமாம் ஹைஷன் மசூதிக்கு அருகில் உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் முகாமிட்டு காத்திருந்த நேரத்தில்., இவர்கள் கலைந்து செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் கலைந்து செல்ல மார்பு தெரிவித்ததை அடுத்து., காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையில்., இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயத்தை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iraq violence peoples died when police shoot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->