ஸ்கவுட் பயிற்சிக்கு சென்ற 9 மாணவர்களை வெள்ளத்தில் சிக்கி பலியான சோகம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் உள்ள யோக்யகர்த்தா மாகாணத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள மலைப்பகுதியில், சாரணர் இயக்கத்தை (Scout) சார்ந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவியர்கள் சுமார் 249 பேர் மலையேற்றத்திற்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில், இப்பகுதியில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற நபர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெரும்பாலான மாணவர்களை மீட்ட நிலையில், சுமார் 8 மாணவர்கள் பரிதாபமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்து இருந்த 23 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுமட்டுமல்லாது வெள்ளத்தில் சிக்கி இரண்டு மாணவர்கள் மாயமாகியுள்ள நிலையில், இவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.. இவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indonesia Scout students died heavy flood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->