சமூக சேவையாக வாழ்ந்து வந்த மனிதர்களையும் கொன்று குவித்த கரோனா.. 53 ஆர்வலர்கள் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸிற்கு மேலும் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் சீன நாட்டில் 3,119 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 40 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், கரோனா பாதிப்பு அடைந்த இடங்களில் பணியாற்றி வந்த சுமார் 53 சமூகநலப்பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் மக்களுக்கு தெரியவந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சீன நாட்டில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 80,735 ஆக இருக்கும் நிலையில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கையானது அடுத்தடுத்து குறைய துவங்கியுள்ளது. இதனால் தற்காலிக மருத்துவமனைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிறது. 

யூகான் நகரில் உள்ள 11 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சீன நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பரவிய கரோனா அடுத்தடுத்து பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china corona virus social interceptors died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->