உணவகத்தின் தூய்மையை பராமரிக்க தவறிய உணவகத்திற்கு., பெரும் தொகையை அபராதமாக விதித்த அதிகாரிகள்.! ஆடிப்போன உரிமையாளர்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில்., பல்வேறு விதமான சூழல்களில் நாம் நமது உணவு தேவைக்காக உணவகங்களை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவ்வாறு நாம் சில உணவகத்திற்கு செல்லும் சமயத்தில்., அந்த உணவகம் ஆடம்பரம் மிக்கதாகவும்., அந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலை பட்டியலையும் கொண்டிருக்கும். 

அவ்வாறு அதிக விலை பட்டியலை கொண்ட உணவகங்களின் உணவுகள் சில நேரத்தில் சுவையில்லாமல் இருக்கலாம்., அதனை போன்று சில சமயத்தில்., உணவுகள் தயார் செய்யப்படும் உணவகத்தை சென்று பார்த்தால்., சுகாதாரம் இல்லாத அளவிற்கும் இருக்கும். அவ்வாறு சுகாதாரம் குறித்த புகார்கள் உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தால்., அவர்கள் சோதனை செய்வது வழக்கம்..

பொதுவாக வெளிநாடுகளில் இருக்கும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பிற உணவுகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து தரம் குறித்து கூறிய பின்னர் அந்த உணவானது மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத பட்சத்தில்., சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் அல்லது தடை விதிக்கும் நிகழ்வானது நடந்து வருகிறது. 

இந்த நிலையில்., ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் பெர்த் நகரின் பகுதியில் "தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்" என்ற பெயரில் இந்திய உணவகமானது செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நிலீஷ் டொக்கே என்பவர் நடத்தி வரும் நிலையில்., உணவகத்தின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை பராமரிக்க தவறியதாக., உணவகத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குற்றம் சாட்டி., சுமார் பனிரெண்டரை இலட்சம் அபராதம் விதித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Australia hotel have fine due to cleanness


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->