ஆஸ்திரேலியாவில்., மூக்குத்தி அணிந்து பள்ளிக்கு சென்ற இந்திய மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இருந்து பணிக்காகவும்., பட்ட படிப்பிற்க்காகவும் மேலை நாடுகளுக்கு செல்லும் பலர் தங்களின் கலாச்சாரங்களை பின்பற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். அந்த வகையில்., சில மேலை நாடுகளில் இந்தியர்களுக்கென்று பிரத்தியேக விதிவிலக்கு முறைகள் இருந்து வருகிறது. சில நாடுகளில் எந்தவிதமான விலக்கும் அளிக்காமல் இருந்தும் வருகின்றன. 

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள பெர்த் நகரில் இந்தியாவை சார்ந்த பெண் அங்குள்ள பள்ளியில் பயில்வதற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் இவரை கவனித்த தலைமை ஆசிரியர்., மாணவி அணிந்திருக்கும் அணிகலன்கள் பள்ளியின் விதிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவித்துளளார். 

மேலும்., மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியை அணியாமல் வரும் பட்சத்திலேயே பள்ளியில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பள்ளியில் சேரும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் எழுத்து பூர்வமாக சீருடைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு., கையொப்பம் இட்ட பின்னரே பள்ளியில் அனுமதி செய்யப்படுவார்கள். 

இதன் காரணமாக அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மனைவியின் தாயார் அளித்த பேட்டியில் கூறியதாவது., மூக்குத்தி அணிவதென்பது ஆடம்பரத்திற்கு இல்லை., எங்களது கலாச்சாரத்தின் அடையாளம். பள்ளியில் பயின்று வரும் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு அனுமதி இருக்கும் சமயத்தில் மூக்குத்தி அணிவதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்தார். 

English Summary

in Australia a Indian girl student pan for Mukkutti Wearing


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal