ஆன்லைன் காதலியை பார்க்க பஞ்சாய் பறந்த வாலிபர் .. அல்லையில் போட்டு கதற கதற மிதி வாங்கிய சோகம்.. பகீர்.!!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோலில்ஸ்தான் நகருக்குள் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அந்நாட்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்., இரண்டு வாலிபர்களின் ஒருவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணையில்., ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சார்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் வைந்தம். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காணாமல் போயுள்ளதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த தருணத்தில்., கடந்த 14 ஆம் தேதியன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாகல்பூர் மாவட்டத்திற்கு அருகேயுள்ள பாகிஸ்தான் நாட்டில் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இவர்களை கைது செய்த அந்நாட்டின் இராணுவ துறையினர்., இவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

love, love images,

அந்த விசாரணையில்., பிரஷாந்திற்கு இணையத்தின் மூலமாக சுவிச்சர்லாந்து நாட்டினை சார்ந்த பெண்ணொருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது காதலியை சந்திக்க கூகுள் மேப் மூலமாக செல்ல முடிவு செய்து., பயணத்தை துவங்கி புறப்பட்டு சென்ற நிலையில்., எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவித்து பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.  

மேலும்., விசாரணைக்கு பின்னர் பெற்றோர்களுக்காக பிரசாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில்., தெலுங்கில் ஒரு மாதத்திற்குள் பாக்கிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்., இவர் சுவிச்சர்லாந்து செல்ல பாகிஸ்தான் பயணத்தை எதற்காக தேர்வு செய்தார் என்பது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in andhra pradesh youngster went to switzerland arrested by pak army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->