தங்கும் விடுதியில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: வசமாக சிக்கிய பெண் ஐ.டி. ஊழியர்! சென்னையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடிக்கடி கஞ்சா போன்ற போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. 

இந்நிலையில் சென்னை, சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் விடுதி அறையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் அந்த அறையில் வாசித்து வந்த இளம் பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, புதுப்பேட்டை சேர்ந்த சர்மிளா என்பதும்  பட்டதாரி பெண்ணான அவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல் தெரியவந்தது.

மேலும் ஷர்மிளாவும் அவரது நண்பர் கால் டாக்ஸி ஓட்டுனர் சுரேஷ் என்பவரும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து பெண் ஐ.டி. ஊழியர் ஷர்மிளா மற்றும் அவரது நண்பர் சுரேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai drugs seized issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->