குரங்கு அம்மைக்கு பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி - ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை, 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த 23-ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. மேலும், குரங்கு அம்மை தொற்று பல்வேறு பாலினத்தருடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களிடம் அதிக அளவில் காணப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் தீவிர பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரியம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் 'இமான்வேக்ஸ்' தடுப்பூசியை குரங்கு அம்மைக்கும் பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் பெரியம்மை நோய்த் தொற்றிற்கு 'இமான்வேக்ஸ்' தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை தொற்றிற்கு 'இமான்வேக்ஸ்' தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Imanvax vaccine used for monkey measles European Commission approves


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->