வங்கதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி: ஹிந்து வியாபாரி கல்லால் அடித்து கொலை: சடலத்தின் மீது கொலையாளிகள் நடனமாடிய கொடூரம்..! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவில் ஆட்சி கவிழ்ந்த பிறகு, அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி அமைந்துள்ளது. இவரது ஆட்சியில் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதுவரையில் 25-க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 150-க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட்டுள்ளதாக வங்கதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடூர சம்பவங்களுக்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. அங்குள்ள  உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அங்கு ஹிந்து வியாபாரி கான்கிரீட் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அந்த சடலத்தின் மீது கொலையாளிகள் நடனம் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் தினஜ்பூரில் பாபேஸ் சந்திர ராய் என்ற ஹிந்து மதத் தலைவர் அடித்து கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 09) பழைய டாக்கா பகுதியில் உள்ள மிட்போர்ட் மருத்துவமனை முன்பு, வியாபாரி லால் சந்த் சோஹாக்கிடம் பணம் பறித்த கும்பல், அவரை கான்கிரீட் கல்லால் அடித்துக் கொன்றுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் உள்ள பல்வேறு பல்கலைகழக வளாகங்களில் மாணவர்கள் பேரணிகளை நடத்தினர். மேலும், வங்கதேசத்தில் இடைக்கால அரசின் செயல்பாடுகள் தோல்வியடைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்தக் கொலை சம்பவத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் உள்பட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 19 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சோஹாக் கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், அவரை கல்லால் அடித்து கொன்று விட்டு, அந்த கொலை கும்பல் அவரது சடலத்தின் நடனமாடியது அம்பலமாகியுள்ளது.

வங்கதேசத்தில் சமீபகாலமாக ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறித்து வங்கதேச ஹிந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் கூறியதாவது; கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04-ஆம் தேதி முதல் தற்போது வரையில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், மொத்தம் 2,442 மத வன்முறை சம்பவங்களை சந்தித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindu trader stoned to death in Bangladesh killers dance on his body


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->