அவர் நாட்டை அழித்தார், நானோ அமைதி கொண்டு வந்தேன்....! - ஒபாமாவை தாக்கிய டிரம்ப் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தலைவர் டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து உலக அரசியலில் ஆச்சரியங்களை கிளப்பி வருகிறார். “செய்தால் பேசுவேன்” என்ற தன்னம்பிக்கையோடு நடந்து வரும் டிரம்ப், இப்போது நோபல் பரிசு குறித்த பேச்சால் மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது,"இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட 8 போர்களை நிறுத்தி அமைதி ஏற்படுத்தியவன் நான்தான்! உலக அமைதிக்காக எடுத்த முயற்சிகளுக்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கூற்றுக்கு பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளன என்பது தகவல்.

இதேசமயம், இன்று நோபல் அமைதி பரிசு வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளது, எனவே உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு சூடு பிடித்துள்ளது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவை நேரடியாக குறிவைத்து பேசினார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது,"ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள்; ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை! அவர் எதுவும் செய்யாமல் நாட்டை குழப்பினார். ஆனால் நானோ 8 போர்களை நிறுத்தியவன்,” என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு, ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்ற 9 மாதங்களுக்குள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். உலக நாடுகளிடையே உறவை வலுப்படுத்தியதற்காக அந்தப் பரிசு வழங்கப்பட்டது.ஆனால் இப்போது டிரம்பின் பேச்சால், “நோபல் பரிசு யாருக்காக,அமைதிக்கா அல்லது அரசியல் பிரபலம் ஆகவா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He destroyed country I brought peace Trump attacks Obama


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->