H-1B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு – இந்தியர்களுக்கு அதிர்ச்சி! H-1B விசா குறித்து அமெரிக்க அரசு விளக்கம்!
H 1B visa fee hiked to Rs 88 lakhs Indians shocked US government explains H 1B visa
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள் வெளிநாட்டவர்களுக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
புதிய உத்தரவு படி, இனிமேல் அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அடுத்த 12 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் H-1B விண்ணப்பித்தவர்களில் 71% பேர் இந்தியர்களே என்பதால், இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்க அரசு பின்னர் விளக்கம் அளித்துள்ளது.
ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம்.
ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்கள் அல்லது தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வரும்போது எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இந்த கட்டணம் பொருந்தும்.
அமெரிக்காவின் கடுமையான இந்த புதிய விதிமுறை, அமெரிக்காவில் வேலை பெற விழையும் இந்திய இளைஞர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையையும், வேலை வாய்ப்பு கனவுகளுக்கும் பெரும் தடையாக மாறியுள்ளது.
English Summary
H 1B visa fee hiked to Rs 88 lakhs Indians shocked US government explains H 1B visa