#BigBreaking:: பரபரப்பு.. ஜப்பான் பிரதமர் "ஃபுமியோ கிஷிடா" மீது குண்டு வீச்சு..!! நூலிழையில் உயிர் தப்பினார்..!! - Seithipunal
Seithipunal


ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு..!!

தென்மேற்கு ஜப்பானில் உள்ள கன்ஜா எனும் பகுதியில் உள்ள பைக்மா எனும் இடத்தில் இன்று காலை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கையெறி குண்டு போன்ற ஒரு பொருளை வீசி உள்ளார். 

இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சத்தம் கேட்டதோடு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து  அந்த நபர் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறியுள்ளார். இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஜப்பான் பிரதமரை சூழ்ந்து கொண்ட பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு உள்ளனர். 

ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசிய நபரையும் பாதுகாப்பு படையினர் தற்பொழுது கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷொன்சோ அபே பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய ஜப்பான் பிரதமர் மீதும் குண்டு வீசி சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்ததால் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது பிரதமர் மீது கையெறி கண்டு வீசப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பானில் தற்பொழுது துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் வலுவடைந்த நிலையில் தற்போது பிரதமர் மீது குண்டு வீழ்ச்சி சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஜப்பான் இந்தியாவுடன் நீண்ட நாட்களாக நட்புறவு கொண்ட நாடாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

grenade was thrown on Japan prime minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->