கண்களில் கண்ணீருக்கு பதில், கட்டிகள்.! சிகிச்சையின் போது மருத்துவர்கள் கண்ட கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


ஆர்மானியாவை சேர்ந்த சாட்டானிக் கஷாயர் என்பவருக்கு அடிக்கடி தண்டுய கண்களில் வலி ஏற்பட்டு இருக்கின்றது. மேலும், அவ்வப்போது கண்களில் இருந்து சிறிய அளவிலான கற்களும் வெளிவந்து இருந்துள்ளது. 

இது ஐஸ் கட்டிகள் போல கண்ணடி போன்ற வடிவில் வெளிவந்துள்ளது. மிகவும் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட அவர், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே மருத்துவர்கள் பரிசோதித்த போது கண்களில் இருந்து அந்த கிரிஸ்டல் கற்கள் போன்று சிறிதளவு வெளிவந்துள்ளது. 

பின்னர் மருத்துவர்கள் கண்களில் இருந்த கற்களை அகற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்க இருப்பினும் அவருக்கு வலி நிற்கவே இல்லை. மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல அங்கே அவரது கண்களில் 30க்கும் மேற்பட்ட கற்கள் இருந்துள்ளது. பின் ஆராய்ச்சி செய்த மருத்துவர்கள் கண்ணீர் துளிகளே கற்களாக மாறி வருவதை அறிந்து கொண்டனர். 

ஆனால், இது எதனால் ஏற்படுகின்றது என தெரியாமல் மருத்துவர்கள் தடுமாறினர். பின்னர் ரஷ்யாவை சேர்ந்த கண் மருத்துவர் சாட்டானிக்கை பரிசோதனை செய்த போது உடலில் புரதச்சத்து மற்றும் உப்பு அதிகமாக இருப்பது தான் இதற்கு காரணம் என கண்டு பிடித்துள்ளார். 

இதுபோல, கிட்னி மற்றும் கல்லீரல் ஆகிய சில பகுதிகளில் கூட இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். உடனடியாக கண்டறிந்து சரி செய்வது அவசியம். அப்படி செய்தால் சரியாகி விடும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வினோத நோய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl infected by different disease in eyes


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal